சன் டிவி சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்போதும் மக்களிடம் வரவேற்பு உள்ளது.  குறிப்பாக அதில் நடிக்கும் நடிகைகளின் அந்தஸ்து கூடுகிறது.  சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  

 

1 /5

மதுமிதா சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா. எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

2 /5

கேப்ரில்லா செல்லஸ் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக சுந்தரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் கேப்ரில்லா செல்லஸ். இவர் டிக் டாக் மூலம் பிரபலமாகி சின்ன திரையில் வாய்ப்பு கிடைத்தது.  இவர் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். 

3 /5

சைத்தா ரெட்டி தற்போது கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சைத்தா ரெட்டி. மேலும் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார்.  இவர் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

4 /5

ஆல்யா மானசா சின்னத்திரை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது ஆல்யா மானசா தான்.  ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானார்.  சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து வரும் இவரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

5 /5

மனீஷா மகேஷ் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி கதாபாத்திரம் மூலம் பிரபலமாகி உள்ளார் மனீஷா மகேஷ். இந்த சீரியலில் நடிக்க மனீஷா மகேஷ் ஒரு நாளைக்கு 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.