காலையில் ஒரு பிடி ஊற வைத்த வேர்க்கடலை... வியக்க வைக்கும் பலன்கள்

வேர்கடலை சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் இதில் காணப்படும் ஊட்ட சத்துக்கள் ஏராளம். இந்நிலையில், ஊற வைத்த வேர்கடலை சாப்பிடுவதால், ஊட்டசத்து இருமடங்காக கிடைக்கும்.

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள வேர்க்கடலையை, வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக, ஊறவைத்து சாப்பிட்டால் பலன் இரட்டிப்பாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

1 /7

வேர்க்கடலையை, எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக, ஊற வைத்த வேர்கடலை எண்ணற்ற நன்மைகளை செய்யும். ஊட்டச்சத்து பலன் முழுமையாக கிடைக்கும். இதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலில் உறிஞ்சப்படுகின்றன.

2 /7

வேர்க்கடலையில், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும், வைட்டமின் ஈ, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

3 /7

ஊறவைத்த வேர்க்கடலை செரிமான சக்தியை மேம்படுத்தும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கி வயிற்றை சுத்தம் செய்கிறது. மேலும் அசிடிட்டி, வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

4 /7

வேர்க்கடலையில் உள்ள மோனோ சாட்டிரேட்டட், பாலி அண்சாசுரேடட் கொழுப்புகள், கெட்ட கொழுப்பை எரித்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

5 /7

உடலுக்கு கதகதப்பை கொடுக்கும் வேர்கடலை, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் நாள் முழுவதும், உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.

6 /7

ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த வேர்க்கடலை, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.