மூளை சுறுசுறுப்பாக்குவது முதல் தைராய்டு வரை... கொய்யா செய்யும் அற்புதங்கள்!

கொய்யாப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை வியக்க தக்க வகையில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

1 /5

மூளை ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் கொய்யாவில் காணப்படுகின்றன. அவற்றில் வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் பி 6 உள்ளன, இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உங்கள் நரம்புகளை தளர்த்தும்.

2 /5

கொய்யாவில் தாமிரம் உள்ளது. இது ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத் தேவையான முக்கியமான கனிமமாகும். இது உங்கள் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது.

3 /5

இரண்டு மிக முக்கியமான அம்சங்கள் கொய்யாவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக மாற்றுகிறது. முதலாவதாக, இது நார்ச்சத்து நிறைந்தது, இரண்டாவதாக, இது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இந்த இரண்டு பண்புகளும் தேவை.

4 /5

கொய்யாப்பழம் கேரட்டைப் போல வைட்டமின் ஏ சத்து நிறைந்ததாக இல்லாவிட்டாலும், அது ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக இருக்கிறது. உங்கள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் ஏ உட்கொள்ளலை நிறைவேற்றவும், உங்கள் கண்களை நல்ல நிலையில் வைத்திருக்கவும் குறைந்தபட்சம் இது உதவும்.

5 /5

கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனால் நீங்கள் இளமையாக காட்சி அளிப்பீர்கள். முதுமை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும்  நிச்சயமானது என்றாலும், தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது குறைந்த பட்சம் அதனை ஒத்திப் போடும்.