தனுஷ் கோட்யான்

  • Dec 18, 2024, 15:06 PM IST
1 /6

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஸ்வின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 537 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

2 /6

அஸ்வினின் ஓய்வை அறிவித்துள்ளதால் அவரது இடத்தை அணியில் யார் நிரப்ப உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்திய மண்ணில் 2012 முதல் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட அஸ்வின் விளையாடாமல் இருந்ததில்லை.

3 /6

சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அஸ்வினுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றார். வரும் காலங்களில் அஸ்வின் இடத்தை நிரப்ப பின்வரும் 3 வீரர்கள் தேர்வு செய்யப்படலாம்.

4 /6

வாஷிங்டன் சுந்தர் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அஸ்வின் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. சுந்தர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 354 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் 22 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

5 /6

குல்தீப் யாதவ் குல்தீப் யாதவ் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் 5 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக மார்ச் 2024ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

6 /6

தனுஷ் கோட்யான் அஷ்வினுக்கு மாற்றாக பிசிசிஐ தனுஷ் கோட்டியானை தேர்வு செய்யலாம். 26 வயதான இவர் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 2 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் உட்பட 1525 ரன்கள் எடுத்துள்ளார்.