சந்தோஷ மழையில் நனையப் போகும் ஜனவரி மாத அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!

ஜனவரி 2023 மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 2023-ம் ஆண்டின் முதல் மாதம் இவர்களுக்கு பண ஆதாயத்தை மகிழ்ச்சியையும் அள்ளித் தரும். ஜனவரி மாத ஜாதகத்தின்படி, சில ராசிகள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பார்கள், அதே சமயம் திருமணம் ஆகாதவர்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். ஜனவரி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிந்து கொள்வோம்.

1 /5

ரிஷப ராசியினருக்கு ஜனவரி மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். அவர்களின் திருமண உறவு நிச்சயிக்கப்படலாம். மறுபுறம், திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத பயணம் செல்ல முடியும். வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும், உங்கள் பணியினால், மேலதிகாரி மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது.

2 /5

கன்னி ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் திடீர் பண பலன்கள் கிடைக்கும். தொழிலதிபர்களின் மனதில் தோன்றும் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகள் பலன் தரும். மறுபுறம், வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவார்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

3 /5

ஜனவரி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல வகையில் பலன்களைத் தரும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

4 /5

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜனவரி 2023 சிறப்பானதாக இருக்கும். துணையிடமிருந்து கிடைக்கும் எந்த விதமான ஆச்சரியமும் உங்கள் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். உறவுகளில் அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணிச்சுமை இருந்தாலும் அதைச் சிறப்பாகக் கையாள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு சிறப்பாக இருக்கும்.

5 /5

மகர ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உள்ள எவருக்கும் சுப தகவல்கள் கிடைக்கும். மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர் மீது நீங்கள் ஈர்க்கப்படலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)