’பிறந்தநாளில் புதுவாழ்வு’ காதலியை கரம் பிடித்த அக்சர் படேல்..! - Photos

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல், தன்னுடைய 28வது பிறந்தநாளில் காதலியை கரம்பிடித்துள்ளார்.

பிறந்தநாளில் புதுவாழ்வை தொடங்கியிருக்கும் அக்சர் படேலின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

1 /4

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான அக்சர் படேல் வியாழக்கிழமை 28வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. அப்போது காதலி மேகாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அக்சர் படேல்.

2 /4

பிறந்தநாளில் புதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள அவருக்கு ரிஷப் பன்ட், ஆர்.பி.சிங், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அக்சர் படேலின் நிச்சயத்தார்த்த விழாவில் குஜராத் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

3 /4

காயம் காரணமாக அக்சர் படேல் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அடுத்தாக இந்தியாவில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

4 /4

ஐ.பி.எல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரை, அந்த அணி சுமார் 9 கோடி ரூபாய்க்கு ரீட்டெய்ன் செய்துள்ளது. ரிஷப் பன்டுக்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு ரீட்டெய்ன் செய்யப்பட்டுள்ளவர் அக்சர் படேல்.