த்ரிஷாவின் இளமையை காக்கும் டயட்! ‘இந்த’ உணவை மட்டும் சாப்பிடவே மாட்டாராம்!

Beauty Secrets Of Actress Trisha: நடிகை த்ரிஷா, 40களை தொட்டுவிட்ட பிறகும் இன்னும் இளமையுடன் காணப்படுகிறார். இதற்கான சீக்ரெட் என்ன தெரியுமா? 

Beauty Secrets Of Actress Trisha In Tamil: தமிழ் ரசிகர்களின் மனங்களில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக குடி கொண்டிருப்பவர், த்ரிஷா. இவருக்கு 40 வயதாகி விட்டது. இருப்பினும், இன்னும் அதே இளமை, அழகுடன் வளம் வருகிறார். இதற்கு இவரது டயட் காரணமாக உள்ளது. 

1 /7

கோலிவுட் திரையுலகில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா. இவர், சினிமாவிற்கு வந்த புதிதில் எந்தளவிற்கு இளமையாக இருந்தாரோ அதே அளவிற்கு தனது 40களை கடந்தும் இளமையை பாதுகாத்து வருகிறார். 

2 /7

ஆண்டுகள் பல கடந்தும், இவரது அதே இளமைக்கான ரகசியம் பலருக்கும் பிடிபடாமல் உள்ளது. அவரது இளமையை காக்க ஸ்ட்ரிக்டான டயட்டையும், உடற்பயிற்சியையும் பின்பற்றி வருகிறார் த்ரிஷா. 

3 /7

முகம் பொலிவு பெறவும், இளமையுடன் காட்சியளிக்கவும் அனைவருக்கும் முக்கியமாக தேவைப்படுவது ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதை, த்ரிஷாவும் பின்பற்றி வருகிறார். 

4 /7

த்ரிஷா, எக்காரணம் கொண்டும் துரித உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டாராம். இது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தாண்டி, அழகையும் குலைத்து விடும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. அதனால், எண்ணெயில் சமைத்த உணவுகள் அல்லது கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் இவரது டயட்டில் இருக்கவே இருக்காதாம். 

5 /7

நடிகை த்ரிஷா, தினமும் காலையில் எழுந்ததும் கிரீன் குடிப்பது அல்லது வெந்நீரில் எலுமிச்சை சாறுடன் இஞ்சி சீவி கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம். இதையடுத்து வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பழங்களையும் இவர் எடுத்துக்கொள்வாராம். 

6 /7

த்ரிஷா, அதிக மேக்-அப்பை விரும்பாதவர் என கூறப்படுகிறது. தனது சருமத்திற்கு ஏற்ற, அழகு சாதன பொருட்களையே த்ரிஷா ஆரம்பத்தில் இருந்து உபயோகித்து வருகிறார். அதே போல, இரவில் தூங்க செல்வதற்கு முன்பு மேக்-அப்பை கலைத்துவிட்டு படுப்பதை பலரும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 

7 /7

சருமம் பொலிவாக இருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. த்ரிஷாவும் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளாராம்.