உடல் பருமன் குறைய... காலை உணவில் சேர்க்க வேண்டியவை!

Weight Loss Diet: ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது எடை இழப்புக்கு அவசியம். சத்தான காலை உணவு, வளர்சிதை மாற்றத்தைத் தொடங்குவதற்கு தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. மேலும் நாள் முழுவதும் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எடை இழப்புக்கும் முக்கியமானது. காலை உணவு முக்கியமானதாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கஉதவுகிறது.

1 /7

நாம் தூங்கும்போது, ​​உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது, எனவே, காலை எழுந்திருக்கும்போது, ​​உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் உணவு தேவை. காலை உணவு முக்கியமானதாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கஉதவுகிறது.

2 /7

ஒரு குறைந்த கலோரி கொண்ட ஓட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாக உள்ளது. மேலும், அதிக நார்ச்சத்து உள்ளதால்,  நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இது வும் இருக்கிறது.

3 /7

நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ள உலர் பழங்கள் மற்றும் விதைகள், உங்களை நாள் முழுவதும் வயிறு நிறைவாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். 

4 /7

உடல் பருமனை குறைக்க புரதம் அவசியம். முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும், மேலும், மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை பராமரிக்க உதவும் கோலின் என்ற சத்தும் அவற்றில் உள்ளது.

5 /7

தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரம். இதில் கால்ஷியமுடன் அதிக புரதமும் குறைவான சர்க்கரையும் உள்ளது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடலின் நச்சுக்களும் வெளியேறுகிறது.

6 /7

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ள பெர்ரி பழங்கள்,  உங்கள் காலை உணவில் சுவை மற்றும் ஊட்டச்சத்தை சேர்ப்பதற்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.