பெண் குழந்தைகளுக்கான சிறப்பான 5 முதலீடு திட்டங்கள்!

குழந்தைகளின் எதிர்கால தேவை, வளர்ச்சி மட்டும் மேப்பாட்டிற்காக பல நிறுவனங்கள் பலவிதமான முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றது.

 

1 /5

சுகன்யா சம்ரித்தி யோஜனா: பெண் குழந்தையின் பெயரைப் பயன்படுத்தி தொடங்கப்படும் இந்த கணக்கில் ஆண்டுதோறும் ரூ.250 முதல் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.  இந்த திட்டத்தில் வருடாந்திர கூட்டு வட்டி விகிதம் 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.  

2 /5

குழந்தைகள் பரிசு மியூச்சுவல் ஃபண்ட்: குழந்தைகளின் திருமணம், உயர்கல்வி போன்ற எதிர்கால தேவைகள் அனைத்தையும் சரிசெய்யும் வகையில் இந்த திட்டம் உதவுகிறது.  ஈக்விட்டி முதலீடுகளுக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும்.  

3 /5

யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்: இந்த திட்டமானது முதிர்ச்சியடையும் போது ஆயுள் கவரேஜ் மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட லாபம் இரண்டையும் வழங்குகிறது.  இந்த திட்டம் உங்கள் குழந்தைகளுக்கான நிதி சிக்கல்களை சமாளிக்கும் அளவிலான வருமானத்தை தருகிறது.  

4 /5

தேசிய சேமிப்புச் சான்றிதழ்: மைனர் குழந்தையின் பெயரில் தொடங்கப்படும் அரசாங்கத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருடாந்திர வட்டி விகிதம் 6.8 சதவீதம் வழங்கப்படுகிறது.  . 1961-ன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-ன் கீழ் என்எஸ்சி திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு ரூ.1,50,000 வரை வரி விலக்கு அளிக்கப்படும்.  

5 /5

தபால் அலுவலக கால வைப்பு: பெண் குழந்தைகளின் திருமணம், கல்வி போன்ற அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க தபால் அலுவலகத்தின் திட்டம் உதவுகிறது.  இதில் உங்களுக்கு வட்டி விகிதம் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கிடைக்கும்.