இந்தியாவில் சிறந்த மைலேஜ் கார்கள் ரூ. 10 லட்சத்தில்! மாருதி சுசுகி பலேனோ முதல் டாடா அல்ட்ராஸ் வரை

Best Mileage Cars in India under Rs 10 Lakhs: இந்தியாவில் 10 லட்சம் ரூபாய் விலையில் சிறந்த மைலேஜ் கொடுக்கும் கார்கள் மாருதி சுசுகி பலேனோ முதல் டாடா அல்ட்ராஸ் வரை உள்ள மாடல்களை பார்க்கலாம்.

1 /6

ரூ.10 லட்சத்தில் இந்தியாவில் சிறந்த மைலேஜ் கார்கள்: ஹேட்ச்பேக், செடான், காம்பாக்ட் எஸ்யூவி முதல் முழு அளவிலான எஸ்யூவி வரை ஏராளமான கார்கள் இந்திய கார் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கார் வாங்க விரும்பும் பெரும்பாலோர் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் மலிவு விலையில் இருக்கும் கார்களை வாங்கவே விரும்புகின்றனர். அந்தவகையில், இந்தியாவில் கார் வாங்குபவர்கள் கருத்தில் கொள்ளும் மற்றொரு முக்கியமான காரணி மைலேஜ் ஆகும். இந்தியாவில் 10 லட்சம் ரூபாய் விலைக்குள் சிறந்த மைலேஜ் தரும் கார்களின் பட்டியலை பார்க்கலாம்.

2 /6

மாருதி சுஸுகி வேகன்ஆர்:  Maruti Suzuki WagonR என்பது இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் ஒரு ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இதன் விலை ரூ.5.52 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது. மாருதி சுஸுகி வேகன்ஆர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் 25.19 கிமீ/லி மைலேஜை வழங்குகிறது, அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 24.43 கிமீ மைலேஜை கொடுக்கிறது.

3 /6

மாருதி சுஸுகி டிசையர்: Maruti Suzuki Dzire என்பது இந்தியாவில் கிடைக்கும் காம்பாக்ட் செடான் மாடலாகும். இதன் விலைகள் ரூ.6.57 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். மாருதி சுஸுகி டிசையர் அதன் பெட்ரோல் எஞ்சினுடன் 26 கிமீ/லி மைலேஜ் கொடுக்கிறது.

4 /6

ஹூண்டாய் ஐ20: ஹூண்டாய் i20 என்பது இந்தியாவில் கிடைக்கும் மற்றொரு ஹேட்ச்பேக் மாடலாகும். இதன் விலை ரூ.7.04 லட்சத்தில் இருந்து ரூ.11.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். Hyundai i20 இரண்டு பவர்டிரெய்ன் கட்டமைப்புகளுடன் கிடைக்கிறது - பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் என இரு வேரியண்டுகளில் இகடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 20 கிமீ/லி மைலேஜையும், டீசல் இன்ஜின் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும் வழங்குகிறது.

5 /6

டாடா அல்ட்ராஸ்: Tata Altroz இந்திய கார் சந்தையில் கிடைக்கும் மற்றொரு ஹேட்ச்பேக் மாடல் ஆகும். Tata Altroz அதன் விலை ரூ.6.65 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது. Tata Altroz பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 18.05 கிமீ/லி எரிபொருள் திறனையும், டீசல் இன்ஜின் 23.64 கிமீ/லி எரிபொருள் செயல்திறனையும் வழங்குகிறது.

6 /6

மாருதி சுஸுகி பலேனோ:  இந்த பட்டியலில் கடைசியாக உள்ள ஒரு ஹேட்ச்பேக் மாடல் மாருதி சுசுகி பலேனோ. இந்தியாவில் அதன் விலை ரூ.6.66 லட்சத்தில் தொடங்கி ரூ.9.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது. மாருதி சுஸுகி பலேனோ பெட்ரோல் எஞ்சினுடன் 22.9 கிமீ/லி மைலேஜை கொடுக்கிறது.