கும்பத்தில் சூரியன் சனி: உச்சத்தில் இந்த ராசிகளின் வாழ்க்கை... பணம், மகிழ்ச்சி பன்மடங்காகும்

Surya Shani Yuti: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அப்படி அவை மாறும்போது சில நேரங்களில் ஒரே ராசியில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மெற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நடக்கின்றது.

Surya Shani Yuti: கிரக சேர்க்கைகள் பல வித ராஜயோகங்களை உருவாக்குகின்றன. பிப்ரவரி 14 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சி (Surya Gochar) ஆகி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்கு வந்தார். சனி பகவான் ஏற்கனவே தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமன (Sani Asthamanam) நிலையில் உள்ளார். இந்த வகையில் கும்ப ராசியில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை உருவாகியுள்ளது. சூரியன் சனி சேர்க்கையினால் அனைத்து 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்படவுள்ள பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /13

புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். பல வித முதலீடுகளை இப்போது செய்யலாம். இவற்றால் லாபம் கிடைக்கும்.

2 /13

நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமான நடந்து முடியும். பணி இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிறு போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வீர்கள். சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும்.

3 /13

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தடைபட்டிருந்த சில பணிகளை தொடர பல கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் சேரும்.

4 /13

எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்றாக யோசித்து செய்வது நல்லது. இந்த வேளையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகலாம். நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனம் ஓடும்போது மிக கவனமாக ஓட்ட வேண்டும்.

5 /13

வியாபாரத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும், சில பிரச்சனைகள் வரலாம். இந்த காலத்தில் ஒரு புதிய வேலையை தொடங்குவீர்கள். இதனால் நிதி லாபம் கிடைக்கும்.  

6 /13

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். தடைபட்ட பணிகள் இப்போது நடந்து முடியும். பழைய பிரச்சனை ஒன்றுக்கு தீர்வு கிடைக்கும். புதிய சவால்களும் வர வாய்ப்புள்ளது.

7 /13

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்கள் சில சவால்களை எதிர்கொள்ளலாம். தாய் தந்தையின் உடல் நிலை குறித்த கவலை இருக்கும்.

8 /13

பணியிட மாற்றம் ஏற்படும். இது சாதகமான பலன்களை அளிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். மன அமைதியும் திருப்தியும் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். எனினும் அதை ஈடுகட்டும் வகையில் பண வரவும் அதிகமாகும்.  

9 /13

பழைய பிரச்சனைகளுக்கு இப்போது தீர்வு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். 

10 /13

உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சண்டைகள் வரலாம். பேசும்போதும் நிதானம் தேவை. திடீரென செலவுகள் அதிகமாகும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். இதனால் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம். வீட்டில் அமைதி நிலவ வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

11 /13

சனி சூரியன் சேர்க்கையின் பலனால் கும்ப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். புதிய உறவுகளும் தொடர்புகளும் உருவாகும். இதனால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

12 /13

உடல்நலன் பாதிக்கப்படலாம். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கவும். இந்த காலத்தில் அதிகபட்ச நிதானம் தேவை. அனைத்து விதமான சர்ச்சைகளையும் தவிர்த்து விடுங்க. பேசும்போது கவனமாக இருந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.