இந்த IPL-ல் மிரட்டும் ஹீரோக்கள்... ஆனால் டி20 உலகக் கோப்பையில் இடமில்லை!

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும் டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் இடம்பெறாத முக்கிய வீரர்களை இங்கு காண்போம். 

  • May 03, 2024, 00:51 AM IST

டி20 உலகக் கோப்பை தொடர், ஐபிஎல் தொடர் நிறைவடைந்த அடுத்த ஒரு வாரத்திலேயே அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.

 

1 /7

சாய் சுதர்சன்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் 418 ரன்களை அடித்துள்ளார், இவர்.   

2 /7

ஜேக் பிரேசர் மெக்கர்க்: டெல்லி அணிக்காக கடந்த 6 போட்டிகளில் களமிறங்கி 259 ரன்களை குவித்திருக்கிறார், இந்த இளம் ஆஸ்திரேலிய சிங்கம். ஆனால் இவருக்கு ஆஸ்திரேலிய டி20 உலகக் கோப்பை அணியில் இடமில்லை.   

3 /7

திலக் வர்மா: மும்பை அணிக்காக அதிக ரன்களை அடித்தவர் இவர்தான். 10 போட்டிகளில் 343 ரன்களை இவர் அடித்துள்ளார். 

4 /7

சுப்மான் கில்: குஜராத் அணிக்காக 10 போட்டிகளில் 320 ரன்களை இவர் அடித்துள்ளார். இருப்பினும் இவர் டி20 உலகக் கோப்பையின் ஸ்குவாடில் ரிசர்வ் வீரராக உள்ளார்.   

5 /7

கேஎல் ராகுல்: லக்னோ அணி கேப்டனான இவர் 10 போட்டிகளில் 406 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் இவருக்கு டி20 உலகக் கோப்பையில் இடமில்லை.  

6 /7

ரின்கு சிங்: இந்த சீசனில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் கூட 123 ரன்களை 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். பினிஷரான இவரையும் ரிசர்வ் வீரராகவே இந்தியா எடுத்துள்ளது.   

7 /7

ருதுராஜ் கெய்க்வாட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், நடப்பு தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இவருக்கும் டி20இல் இடமில்லை. 10 போட்டிகளில் 503 ரன்களை குவித்துள்ளார்.