சிறுசேமிப்பு திட்ட விதிகளில் பெரிய மாற்றம் செய்த அரசு: இதை உடனடியாக செய்து விடுங்கள்

Small Savings Schemes New Rules: தற்போது, ​​நாட்டில் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் இயங்கி வருகின்றன. இதில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), செல்வமகள் சேமிப்பு  திட்டம் (SSY) போன்ற அரசு திட்டங்கள் உள்ளன. 

நீங்கள் இந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அரசாங்கம் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் எந்த அரசாங்க திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டாலும், பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் இவற்றின் பலன்களை நீங்கள் பெற முடியாது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

சிறு சேமிப்பு திட்டங்கள்: நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் பல வகையான சேமிப்பு திட்டங்களை நடத்தி வருகின்றது. 

2 /8

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா / செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY), மகிளா சம்மான் யோஜனா மற்றும் தபால் அலுவலக திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்பவர்களுக்கான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது.

3 /8

சில காலத்திற்கு முன்பு, நிதித் துறை மூலம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் சிறு சேமிப்புத் திட்டம் KYC ஆகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 

4 /8

முதலீட்டாளர்கள் இனி எந்த விதமான முதலீடு செய்யவேண்டுமானாலும் முதலில் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர, வரம்புக்கு மேல் முதலீடு செய்ய, பான் கார்டின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். பான் கார்டு இல்லாமல் முதலீடு செய்ய முடியாது.

5 /8

அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டத்திற்கான கணக்கைத் திறக்கும்போது உங்களிடம் ஆதார் இல்லையென்றால், ஆதார் எண்ணுக்கான பதிவுச் சீட்டை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன், முதலீட்டாளர் சிறுசேமிப்பு திட்டத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

6 /8

இந்த ஆவணங்கள் தேவைப்படும்: ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு எண் ஆகிய ஆவணங்கள் கணக்கை தொடங்க தேவைப்படும். 

7 /8

இந்தத் திட்டங்களில் முதலீட்டை மிகவும் வெளிப்படையானதாகவும் எளிதாகவும் மாற்றும் நோக்கத்தில் இந்த மாற்றம் அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

8 /8

ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை 30 செப்டம்பர் 2023 -க்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்கு அக்டோபர் 1, 2023 முதல் தடை செய்யப்படும்.