சோகத்தில் ரசிகர்கள்... அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட சிஎஸ்கே!

IPL 2024, Chennai Super Kings: 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இந்த முக்கிய வீரர் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • Nov 23, 2023, 18:10 PM IST
1 /7

17ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு மினி ஏலம் டிச.19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

2 /7

ஐபிஎல் அணிகள் தாங்கள் ஏலத்திற்கு முன் விடுவிக்க உள்ள வீரர்களையும், தக்கவைத்துக்கொள்ள வீரர்களையும் நவ.26ஆம் தேதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 /7

அனைத்து அணிகளும் மும்முரமாக உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

4 /7

வரும் 2024 ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என முடிவெடுத்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது. அவரின் வேலைப்பளுவை நிர்வகிக்கும் பொருட்டு இந்த முடிவை பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ளதாகவும், அவரின் முடிவை சிஎஸ்கே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

5 /7

இந்த தொடரில் அவர் விளையாட மாட்டார் என்பதால் அவருக்கு பதில் வேறு ஒருவரை சிஎஸ்கே எடுக்கும். மேலும், இந்த மினி ஏலத்தின் பர்ஸிலும் சிஎஸ்கேவிற்கு ரூ.16.25 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

6 /7

அவர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதன்பின் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என்பதால் பென் ஸ்டோக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.     

7 /7

அதாவது, கடந்தாண்டு மினி ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு சென்னை அவரை வாங்கியது. ஆனால், கடந்த தொடரிலும் அவர் காயம் காரணமாக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.