IND vs AUS Third Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் நாளை (மார்ச் 1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டி குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இங்கு காணலாம்.
WTC Final:இந்த போட்டியை வென்றால், இந்தியா தொடரை வெல்லுவது மட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதிபெறும். இந்த போட்டியை வெல்ல, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது.
IND vs AUS, India's Playing XI: இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கும் நாளை போட்டியின் பிளேயிங் லெவனுக்கும் பெரிதும் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது. இருப்பினும், தொடக்க வீரரான கே.எல். ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS, Virat Kohli: இந்த போட்டியில், விராட் கோலி 77 ரன்களை சேர்த்தால், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் - ரோஹித் இணை வெறும் 44 ரன்களை எடுத்தால், டெஸ்ட் அணியில் இந்த ஜோடி 1000 ரன்களை கடக்கும்.
IND vs AUS, Steve Smith: ஆஸி., அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தனிப்பட்ட காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்த போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார். வார்னர், ரென்ஷா, பாட் கம்மின்ஸூக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க், போலாண்ட், கேம்ரூன் கிரீன் ஆகியோர் நாளைய போட்டியில் விளையாட வாய்ப்பளிக்கப்படலாம்.
IND vs AUS, Streaming Details: இந்தியா ஆஸ்திரேலியா தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. DD Sports சேனலிலும் நீங்கள் நேரடி ஒளிபரப்பை காணலாம். மேலும், Disney+ Hotstar ஓடிடியில் சந்தா கொடுத்தும் நேரலையில் பார்க்கலாம்.