Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?

Budget 2024: நிர்மலா சீதாராமன் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  இதில் அதிக அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

1 /5

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிப்ரவரி 1 அன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  இதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.  இந்நிலையில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன என்பதை பார்ப்போம்.  

2 /5

புதிய வருமான வரி விதிப்பின் கீழ் தனிநபர் வருமான வரிக்கான தள்ளுபடி வரம்பு ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய் 7 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், வரி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டது.  

3 /5

சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நிலையான விலக்கு ரூபாய் 50,000 லிருந்து ரூபாய் 52,500 ஆக உயர்த்தப்பட்டது.  அதே போல வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி சேமிப்பு மூலம் முதலீடு செய்வதற்கான வரம்பு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது.  

4 /5

கடந்த பட்ஜெட்டில் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி உதவித்தொகை, நிதியுதவி உள்ளிட்ட கல்விக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டது.  இது நல்ல வரவேற்பை பெற்றது.  

5 /5

பழைய வீடு புதுப்பிப்பு மற்றும் புது வீடு வாங்குபவர்களுக்கு வரிச் சலுகைகள் உட்பட, மலிவு விலையில் வீடுகளை கட்டுவதற்கு பல நடவடிக்கைகளை கடந்த பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.