ரோகித் செய்த தவறு.. பென் டக்கெட் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடிய பும்ரா

ரோகித் சர்மா தவறான முடிவால் தப்பிப் பிழைத்த பென் டக்கெட் மீண்டும் பும்ரா பந்துவீச்சிலேயே அவுட்டானார்.

 

1 /8

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும்போது முதல் ஓவரை வீச வந்தார் பும்ரா.    

2 /8

பும்ராவால் வீசப்பட்ட முதல் ஓவரின் கடைசி பந்து அபாரமான இன் ஸ்விங்கராக அமைந்தது. அந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் பென் டக்கெட் தடுமாற, அந்த பந்து கால்களில் பட்டு சென்றது.  

3 /8

அப்போது பும்ரா, ரோகித் சர்மாவிடம் டிஆர்எஸ் முறையீடலாம் என்று கோரினார். ஆனால் கேஎஸ் பரத் மறுக்க, டிஆர்எஸ் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.   

4 /8

ஆனால் அந்த ஓவருக்கு பின் ரீ-ப்ளேவில் அந்த பந்து விக்கெட் என்பது தெரிய வந்தது. இதனால் மைதானத்திலேயே பும்ரா தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.  

5 /8

இதன்பின் பும்ரா மீண்டும் அடுத்த ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 2 பவுண்டரிகளை விளாசினார் பென் டக்கெட். இருப்பினும் பும்ரா அவருக்கு இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று மாற்றி மாற்றி வீசி கலங்கடித்தார்.   

6 /8

சரியாக 5வது பந்தில், ஆஃப் ஸ்டம்பை குறி வைத்து இன்ஸ்விங்கர் வீச, அதனை டக்கெட் மிஸ் செய்தார். அந்த பந்து ஆஃப் ஸ்டம்பை தூக்கி சென்றது. இதனால் டக்கெட் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.  

7 /8

இதனால் உற்சாகமடைந்த பும்ரா ஆக்ரோஷமாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே டக்கெட் அவுட்டான நிலையில், நடுவரின் தவறான முடிவு மற்றும் டிஆர்எஸ் எடுக்காததன் காரணமாக டக்கெட் தப்பினார்.   

8 /8

ஆனாலும் பும்ரா வீசிய 2வது ஓவரிலேயே அவரை வீழ்த்தியதன் காரணமாக பும்ரா ஆக்ரோஷமாக கொண்டாடினார்.