Piles Cure: பைல்ஸ் நோயாளிகள் உலர் பழங்களை சாப்பிடலாமா?

Piles Cure: பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல் ஆகும். சிகரெட் மற்றும் மது அருந்துதல், அதிக நேரம் கழிப்பறையில் உட்கார்ந்து இருப்பது, மலம் கழிக்க சிரமப்படுதல், எடை அதிகரிப்பு, கனமான பொருட்களை தூக்குதல், கர்ப்பம் ஆகியவை பைல்ஸ் பிரச்சனையை ஏற்படுத்தும். பைல்ஸ் நோய்க்கு தவறான உணவு முறையும் காரணமாக அமையும்.

பைல்ஸ் நோயாளிகள் உலர் பழங்களை சாப்பிடலாமா? சாப்பிடலாம் என்றால், எந்த உலர் பழங்களை உண்ணலாம்? இவற்றை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

1 /5

பைல்ஸ் நோயாளிகள் உலர் பழங்களை அதிகமாக உட்கொள்வது பைல்ஸின் அறிகுறிகளை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். நோயாளிகள் சில உலர் பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை அதிகமாகலாம். 

2 /5

குளிர் காலத்தில் சிலர் உலர் பழங்களை அதிகமாக உட்கொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இது மூலநோய் பிரச்சனையை அதிகரிக்கும். சில நோயாளிகளுக்கு சிறிய அளவில் உலர் பழங்களை உட்கொண்டாலும் பிரச்சனை வரக்கூடும். 

3 /5

பைல்ஸ் நோயாளிகள் உலர் பழங்களை சாப்பிட விரும்பினால், அவர்கள் ஊறவைத்த பாதாமை சாப்பிடலாம். 5-7 பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். 

4 /5

பைல்ஸ் நோயாளிகள் உலர் பழங்களை சாப்பிட விரும்பினால், ஊறவைத்த வால்நட்ஸை சாப்பிடலாம். ஒன்று, இரண்டு வாதுமை கொட்டைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள்.   

5 /5

பைல்ஸ் நோயாளிகளுக்கு அத்திப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். நார்ச்சத்து நிறைந்த அத்திப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. பைல்ஸ் நோயாளிகள் ஊறவைத்த 2-3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், பைல்ஸ் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.