விஜய்யின் 'லியோ' படத்தில் உருவாகி உள்ள புதிய சிக்கல்! குழப்பத்தில் திரையரங்குகள்!

Leo Trailer: விஜய்யின் லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி, பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ட்ரைலரை திரையிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

1 /7

தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

2 /7

முதலில், கடந்த மாதம் நடைபெற இருந்த பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் லியோ படத்தின் ட்ரைலர் அக்டோபர் 6ம் தேதி வெளியானது.  

3 /7

விஜய் படங்களின் ட்ரைலரை சில திரையரங்குகள் பொது வெளியில் ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டும்.  ஆனால் இந்த முறை இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.  

4 /7

இருப்பினும், ஒரு சில திரையரங்குகள் தங்கள் திரைகளுக்குள் லியோ டிரெய்லரை திரையிட செய்தன. ஆனால், யூடியூப்பில் வெளியான லியோ ட்ரைலர் தணிக்கை செய்யப்படவில்லை.   

5 /7

ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசி இருப்பதை அறிந்திடாத திரையரங்கு நிர்வாகங்கள் ட்ரைலரை திரையிட்ட.  சட்டப்படி, தணிக்கை செய்யப்படாத வீடியோக்களை திரையரங்கில் ஒளிபரப்பு செய்யக்கூடாது.     

6 /7

தற்போது, ​​'லியோ' படத்தின் தணிக்கை செய்யப்படாத டிரெய்லரை திரையிட்ட சில திரையரங்குகளுக்கு சிபிஎஃப்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  

7 /7

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கெட்ட வார்த்தை பேசியது அந்த கதாபாத்திரம் தான். மேலும், கதையின் தீவிரத்திற்கு இது போன்ற ஒரு காட்சி தேவை என்றும், கெட்ட வார்த்தைகள் படத்தில் மியூட் செய்யப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.