வண்ணங்களில் ஜொலிக்கும் சென்னை மாநகராட்சி கட்டடத்தின் 5 தகவல்கள்

வண்ணங்களில் ஜொலிக்கும் சென்னை மாநகராட்சி கட்டடம் தமிழகத்தின் பாரம்பரிய மிக்க அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது.

ரிப்பன் கட்டடம் என அழைக்கப்படும் இந்தக் கட்டடம், கோதிக், அயனிய மற்றும் கொறிந்திய கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.

1 /4

1913 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டடத்துக்கு சென்னையில் ஆட்சி செய்த பிரித்தானிய ஆளுநர் ரிப்பன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

2 /4

சென்னை மாநகராட்சி மேயராக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை இருந்துள்ளார். 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை இருந்த அவர், மீண்டும் 2001 முதல் 2002 ஜூன் மாதம் வரை அப்பதவியில் இருந்தார்.  

3 /4

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அதன்பிறகு யாரும் மேயராக இல்லை. இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து திமுகவின் பிரியா மேயராக உள்ளார். அவருக்கு வயது 28. 

4 /4

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநகராட்சிக் கட்டடத்தை புனரமைத்து, தமிழ் வாழ்க மற்றும் தமிழ் வளர்க என்ற பேனரை பொருத்தியுள்ளது. மேலும், நாள்தோறும் பல வண்ணங்களில் கட்டடம் ஜொலிக்க வைக்கப்படுகிறது. முக்கிய நாட்களுக்கு ஏற்ப வண்ணங்கள் மிளிர வைக்கப்படுகின்றன.