ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பதிரானா (ரூ.13 கோடி), சிவம் தூபே (ரூ.12 கோடி), தோனி (ரூ.4 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட பேட்டர்கள்: டேவான் கான்வே (ரூ.6.25 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.3.4 கோடி), ஷேக் ரஷீத் (ரூ.30 லட்சம்), ஆன்ட்ரே சித்தார்த் (ரூ.30 லட்சம்) விக்கெட் கீப்பர் பேட்டர்: வான்ஷ் பேடி (ரூ.55 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின் (ரூ.9.75 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி - RTM), விஜய் சங்கர் (ரூ.1.2 கோடி- வேகப்பந்துவீச்சாளர்), சாம் கரன் (ரூ.2.4 கோடி - வேகப்பந்துவீச்சாளர்), அன்சுல் கம்போஜ் (ரூ.3.4 கோடி - வேகப்பந்துவீச்சாளர்), தீபக் ஹூடா (ரூ.1.7 கோடி), ராமகிருஷ்ண கோஷ் (ரூ.30 லட்சம்)
ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்: கலீல் அகமது (ரூ.4.80 கோடி), முகேஷ் சௌத்ரி (ரூ.30 கோடி), குர்ஜப்னீத் சிங் (ரூ.2.2 கோடி), கமலேஷ் நாகர்கோட்டி (ரூ.30 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள்: நாதன் எல்லீஸ் (ரூ.2 கோடி), ஜேமி ஓவர்டன் (ரூ.1.5 கோடி)
ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர்கள்: நூர் அகமது (ரூ.10 கோடி), ஷ்ரேயஸ் கோபால் (ரூ.30 லட்சம்)
மொத்தம் ஒதுக்கப்பட்ட ரூ.120 கோடியில், ரூ.65 கோடியை சிஎஸ்கே (Chennai Super Kings) ஏலத்திற்கு முன்னரே பயன்படுத்திவிட்டது. 1 RTM மற்றும் ரூ.55 கோடியுடன் சிஎஸ்கே ஏலத்திற்கு (IPL 2025 Mega Auction) வந்தது.
மொத்தம் 25 வீரர்களையும் சிஎஸ்கே அணி நிரப்பிவிட்டது. ஏலத்தில் மட்டும் செலவிட்டு ரூ.54.95 கோடியை செலவிட்டு ரூ.5 லட்சத்தையும் மிச்சம் வைத்திருக்கிறது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியான வெளிநாட்டு ஆல்-ரவுண்டரை எடுக்காதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.