Corona Cases in World: மீண்டும் கொரோனா பரவல்: நாடு முழுவதும் உஷார்

Corona Cases in China: உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது சீனாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனர். மேலும் 1500-2000 பேர் உயிரிழப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

1 /7

சீனா: இங்கு தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த மூன்று மாதங்களில் நோய்த்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2 /7

ஜப்பான்: இங்கு கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அங்கு தினமும் 70 முதல் 1 லட்சம் நோயாளிகள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 53 ஆயிரத்து 730 பேர் உயிரிழந்துள்ளனர். 

3 /7

தென் கொரியா: செவ்வாய்க்கிழமை, தென் கொரியாவில் 87 ஆயிரத்து 559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 56 நோயாளிகள் இறந்தனர். இங்கு இதுவரை 31 ஆயிரத்து 490 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

4 /7

பிரான்ஸ்: செவ்வாயன்று 71 ஆயிரத்து 212 புதிய தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன, 131 பேர் இறந்துள்ளனர். மறுபுறம் 3.76 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.60 லட்சம் ஆகும்.   

5 /7

ஜெர்மனி: செவ்வாயன்று, 52 ஆயிரத்து 528 புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன, 201 பேர் இறந்துள்ளனர். இதுவரை, இந்த நாட்டில் 3.70 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 1.60 லட்சமாக உள்ளது.

6 /7

அமெரிக்கா: வல்லரசு அமெரிக்காவில் தினமும் 20-30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாயன்று, 25 ஆயிரத்து 714 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இந்த நாட்டில் இதுவரை 10 கோடியே 18 லட்சம் பேர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். பலி எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரம் ஆகும். 

7 /7

இந்தியா: செவ்வாயன்று, நாட்டில் 103 பேர் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 4527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.