தலை முதல் கால் வரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கோலின் ஊட்டச்சத்து கொண்ட உணவுகள்

Choline Rich Foods: நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட கோலின் சத்து நிரம்பிய உணவுகள் இவை...   

கோலின் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும், இது பெரும்பாலும் விலங்குகள் சார்ந்த உணவுகளில் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் சத்து அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க | நிலக்கடலையை இப்படி சாப்பிட்டா ஆரோக்கியமான வாழ்க்கை கேரண்டி

1 /6

மூளை ஆரோக்கியம், அறிவாற்றல், நரம்பு மண்டலம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகள், அசிடைல்கொலின் உற்பத்தி என பல ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாகிறது கோலின் 

2 /6

குயினோவாவில் கோலின் மட்டுமல்ல, புரதச்சத்தும் நிரம்பியிருக்கிறது. முழு அமினோ அமிலத்தை முழுமையாக கொண்ட உணவுகளின் முக்கியமான குயினோவா, சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

3 /6

வேர்க்கடலை மற்றும் கொட்டைகளை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது வேறு வடிவத்தில் உண்டாலும் அது கோலின் சத்துக்கு ஆதாரமாக அமையும்

4 /6

பச்சை காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் தாவர புரதம் அதிகமாக உள்ளது, மேலும் அவை திடமான அளவு கோலின் கொண்டிருக்கின்றன.

5 /6

தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று மற்றும் இறைச்சிக்கு சிறந்த மாற்று என்றால் அது சோயா தான். சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் சிறந்த மூலமாகும். டோஃபு மற்றும் சோயா பாலில் கோலின் நிறைந்துள்ளது, ஒரு கப் சோயா பாலில் சுமார் 81.7 மி.கி கோலின் உள்ளது

6 /6

புரதம் மற்றும் நார்ச்சத்து மட்டுமல்ல, அதிக அளவு கோலைனையும் கொண்டவை பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் வகைகள்