ICG on Colombo Ship fire: தணிந்தது தீ, எண்ணெய் கசிவு இல்லை

இலங்கைக்கு அருகில் சில தினங்களுக்கு முன்னதாக எக்ஸ்-பிரஸ் பெர்ல் என்ற சரக்குக் கப்பலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இலங்கையின் வேண்டுகோளுக்கு  இணங்க,  இந்தியாவின் இரண்டு கடலோர ரோந்து கப்பல்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன...

சென்னை: இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த கப்பலில் தீப்பிடித்தது. கப்பலில் 1486 கொள்கலன்கள் மற்றும் சுமார் 25 டன் அபாயகரமான நைட்ரிக் அமிலம் மற்றும் பிற ரசாயனங்கள் இருந்தன.

MV X-Press Pearl என்ற அந்தக் கப்பலில் மே 20, வியாழக்கிழமை அன்று,தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

இந்திய கடலோர காவல்படையின் உதவியுடன் இலங்கை தீயணைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கப்பலில் உள்ள ரசாயனங்களும், அமிலமும் கடல் நீரில் கலந்தால், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என அஞ்சப்பட்டது. தற்போது அந்த ஆபத்து நீங்கிவிட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவிக்கிறது.

Also Read | 'Save Lakshadweep' பிரசாரத்திற்கு குவியும் நடிகர்களின் ஆதரவு

1 /5

இரண்டு இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் இலங்கை கப்பல்களின் முயற்சியால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இரவு பகலாக தொடர்ந்த தீயணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV X-Press Pearl)  சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ கணிசமாகக் குறைந்துள்ளது. 

2 /5

ஐ.சி.ஜி டோர்னியர் (ICG Dornier) விமானம் வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்ட வான்வழி கண்காணிப்பில், இந்த விபத்தால் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்பது உறுதியானது  

3 /5

இலங்கை கப்பல்களின் உதவியுடன் இந்திய கடலோர காவல்படை தீயணைப்பு முயற்சிகளை மேற்கொண்டது

4 /5

வைபவ் மற்றும் வஜ்ரா என்ற இந்திய கப்பல்களின் முயற்சியால் தீப்பிழம்புகள் மட்டுப்பட்டுல்ளன

5 /5

மோசமான வானிலை, மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில், ஐ.சி.ஜி கப்பல்கள் விபத்துக்குள்ளான கப்பலில் தீயணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.