கிரிக்கெட் களத்தில் உயிரிழந்த வீரர்கள்... அப்துல் அஜீஸ் முதல் பிலிப் ஹியூஸ் வரை - ஒரு பார்வை

கிரிக்கெட் ஆடுகளத்தில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள் குறித்தும், அதன்மூலம் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் இதில் காணலாம். 

  • Jan 31, 2024, 20:14 PM IST

 

 

 

 

1 /7

1959ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் அஜீஸ் அவரது மார்பில் பந்து தாக்கியதில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அந்த பந்து அவரது இதயப் பகுதியை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.  

2 /7

1998ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த கிளப் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ராமன் லம்பா ஹெல்மெட் இல்லாமல் விளையாடினார். அவரது தலையில் அடிபட்டது. இதனால் லம்பா கோமா நிலைக்கு சென்றார். அவரின் உயிரும் அங்கேயே பிரிந்தது. 

3 /7

2006ஆம் ஆண்டு மாரடைப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் ராஜா மைதானத்தில் மரணமடைந்தார்.

4 /7

2013ஆம் ஆண்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சுல்பிகர் பாட்டி உள்நாட்டு முதல் தர போட்டியின் போது, வேகப்பந்துவீச்சாளர் வீசிய பந்து மார்பில் தாக்கியதில், இவரின் உயிர் பிரிந்தது. 

5 /7

2013ஆம் ஆண்டில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் பியூமொன்ட் மாரடைப்பால் சரிந்து உயிரிழந்தார். 

6 /7

2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் தர போட்டியின் போது ஒரு பவுன்சர் பிலிப் ஹியூஸின் கழுத்தில் தாக்கியதில், அவர் உயிர் பிரிந்தது.  இவரின் உயிரிழப்பு பல பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விதிட்டது.

7 /7

ஹெல்மட், செஸ்ட் பேட் உள்ளிட்ட பல பாதுகாப்பு உபகரணங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும், பல மருத்துவ பரிசோதனைகளும் போட்டிக்கு முன் மேற்கொள்ளப்படுகின்றன. ஆஸ்திரேலிய அணி கழுத்து போன்ற தலையின் பின்பகுதியிலும் பந்து தாக்காதவாறு புதிய ஹெல்மட்டை வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.