ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள Deadpool & Wolverine படத்தின் ட்ரைலர்!

ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் 'Deadpool & Wolverine' டிரெய்லர் வசீகரிக்கும் காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

1 /5

மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து இன்னொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர்களாக மாறிய படங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  

2 /5

இந்நிலையில் தற்போது புதிய படம் வெளியாக உள்ளது. மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக Deadpool & Wolverine படம் வெளியாக உள்ளது. ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.   

3 /5

இப்படம் ஜூலை 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

4 /5

முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சராக வெளிவரவிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சுவாரஸ்யமாக உள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மீண்டும் ஒருமுறை மகிழ்விக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.   

5 /5

எம்மா கொரின், மொரீனா பாக்கரின், ராப் டெலானி, லெஸ்லி உக்காம்ஸ், கரண் சோனி, மேத்யூ மக்ஃபேடியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். Deadpool & Wolverine உலகம் முழுவதும் ஜூலை 26 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.