நீரிழிவு உணவு: இன்சுலின் உற்பத்தியை பெருக்கும் ‘சூப்பர்’ உணவுகள்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த உணவுகள் இயற்கையான வகையில் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது.

1 /5

வெண்டைக்காய்: வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

2 /5

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு நல்லது. தேநீரில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அதிக நன்மை பயக்கும். இது கிட்டத்தட்ட நமது கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படுகிறது.

3 /5

பாகற்காய்: சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு. இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டிருப்பதால் கணையத்தைத் தூண்டும். 

4 /5

வெந்தயம்: வெந்தயம் எடையைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. வெந்தயத்தில் ட்ரைகோனெல்லின் உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும்.

5 /5

மஞ்சள்: மஞ்சளில் அதிக அளவு குர்குமின் உள்ளது. மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.