ஜியோவின் மாஸ் பிளானால் காலியாகும் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சன்

ஜியோ ஓடிடி தளத்தில் கால் பதித்திருக்கும் நிலையில் இந்தியாவில் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சன் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 

 

1 /5

இந்தியாவில் இப்போது ஓடிடி ஸ்ட்ரீமிங் போர்  நடந்து வருகிறது. இந்தியா போன்ற இந்த பெரிய சந்தையைப் பிடிக்கப் பல டாப் நிறுவனங்களும் போட்டுப் போட்டுக் கொண்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நமது நாட்டில் ஸ்ட்ரீமிங் துறையில் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் தான் முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமே கிரிக்கெட் போட்டிகள் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.   

2 /5

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஸ்ட்ரீமிங்க்கான ஏலத்தில் ஒளிபரப்பு உரிமையைப் பெற டிஸ்னி தவறியது. 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் டிஸ்னியின் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது. இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்ட்ரீமிங் உரிமையை இழந்ததன் விளைவாக இத்தனை லட்சம் சப்ஸ்கிரைபர்களை டிஸ்னி இழந்துள்ளது.  

3 /5

இந்தியாவில் ஹாட்ஸ்டார் என்று அழைக்கப்பட்டாலும் உலகளவில் இது டிஸ்னி+ என்றே குறிப்பிடப்படுகிறது. இதன் சப்ஸ்கிரைபர்கள் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. அதில் டிஸ்னி+ மொத்த சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை முந்தைய காலாண்டில் இருந்து 40 லட்சம் குறைந்து 157.8 மில்லியனாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  

4 /5

ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்ட்ரீமிங் உரிமையை இழந்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால் அதிகப்படியாக இந்தியாவிலேயே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடாவில் 300,000 பேரை இழந்துள்ளது. அங்கே கடந்த டிசம்பர் மாதம் தான் டிஸ்னி+ தனது கட்டணத்தை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.    

5 /5

டிஸ்னியின் தலைமை நிதி அதிகாரி கிறிஸ்டின் மெக்கார்த்தி கடந்த பிப்ரவரி மாதமே இது குறித்து எச்சரித்திருந்தார், விலை அதிகரிப்பால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறையும் என கூறியிருந்தார். அதன்படியே சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.