Diwali Gift: ₹1,500க்கும் குறைவான விலையில், அசத்தலான தீபாவளி பரிசுகள்

தீபாவளிக்கு இன்னும் சிஅல்நாட்களே எஞ்சியுள்ள நிலையில், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் என்ன பரிசுகளை வழங்க வேண்டும் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா. ரூ.1,500-க்கும் குறைவான விலையில் அற்புதமான பரிசுகளைப் வாங்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் தள்ளுபடி விலை ரூ.1,500-க்கும் குறைவு என்பதோடு, அவை உங்கள் அன்பானவர் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் என்பது உறுதி.

1 /5

ரீசார்ஜ் செய்யக்கூடிய LED விளக்கை 28% தள்ளுபடிக்கு பிறகு Mi இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் அசல் விலையான ரூ.1,799க்கு எதிராக ரூ.1,299க்கு வாங்கலாம். இதனை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், ஐந்து நாட்களுக்கு உங்களுக்கு வெளிச்சத்தை அள்ளிக் கொடுக்கும்.

2 /5

ரியல்மீ வழங்கும் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்களை ரூ.1,399க்கு Flipkart இலிருந்து வாங்கலாம். இந்த ஸ்பீக்கருக்கு IPX5 ரேட்டிங்கும் கிடைத்துள்ளது, அதாவது தண்ணீர் புகுந்தால் கூட பழுதாகாது.

3 /5

உங்கள் அன்புக்குரியவர்கள் வொர்க் ப்ரம் ஹோம் எடுத்துக் கொண்டிருந்தால், அல்லது மடிக்கணினிகளை அதிகம் பயன்படுத்தினால், அவர்களுக்கு வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் கொடுப்பது சிறந்த பரிசாக இருக்கும். அமேசானில் டெல் நிறுவனத்தின் வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் காம்போவை ரூ.1,119க்கு வாங்கலாம்.

4 /5

Xiaomiயின் 20,000mAh பவர் பேங்கை ஜியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.1,499க்கு வாங்கலாம். நீங்கள் விரும்பினால், குறைந்த திறன் கொண்ட, 10,000mAh பேட்டரி கொண்ட பவர் பேங்கையும் வாங்கலாம், அதன் விலை ரூ.899.

5 /5

இந்த BoAt இயர்போன்களை Flipkart தளத்திலிருந்து வெறும் ரூ.499க்கு வாங்கலாம். இவற்றில் ஒரு மைக்கும் உண்டு. பல வண்ணங்களில் கிடைக்கிறது.