எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் பிழிந்து எடுக்கும் இந்த பானங்கள்

Teas For Reducing Cholesterol: இந்த 5 பானங்கள் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். அவை என்ன பானகள் என்று பார்ப்போம்.

தற்போது தவறான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிக கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் பானங்கள் பற்றி காண உள்ளோம்.

1 /6

கெமோமில்: கெமோமில் டீ கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு நன்மை பயக்கும். இதில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். 

2 /6

மஞ்சள்: மஞ்சள் தேநீர் அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.

3 /6

இஞ்சி: இஞ்சி டீயை குடித்து வந்தால் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் கொழுப்பை உருக வைக்க உதவும்.

4 /6

லெமன்கிராஸ்: லெமன்கிராஸ் டீ கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஊழலதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

5 /6

வெந்தயம்: ஹை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வெந்தய டீயை உட்கொள்ளலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.