கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தரும் கிரகமான சனி பகவான் தற்போது கும்பத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து வருகிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கொடுக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஷஷ யோகம்.
ஷஷ யோகம் அரச வாழ்வை அளிக்கும் யோகம் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். மிகவும் அரிதான யோகமான இது அரிய பஞ்சமாக புருஷ யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஷஷ மகா புருஷ யோகம்: கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் குறிப்பிட்ட சில ராசிகள், செல்வம் செல்வாக்கு, சமூகத்தில் கௌரவம், உயர்ந்த பதவிகள் ஆகியவற்றை அடைந்து வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை காண்பார்கள். அரிய பஞ்ச மகா புருஷ யோகம் எனப்படும் ஷஷ யோகத்தினால் பலன் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசிக்காரர்கள் ஷஷ யோகத்தினால், மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆளுமை தன்மையுடனும் இருப்பார்கள். மனதிற்கு பிடித்த வேலை கிடைத்து, நிம்மதியாக வாழ்க்கையை தொடங்குவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூட கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் ஷஷ மகா புருஷ யோகத்தினால், உயர் பதவிகளை அடைந்து, சமூகத்தில் மரியாதையையும் கௌரவத்தையும் பெறுவார்கள். இதில் செல்வாக்கு மிக்க பதவிகள் மூலம் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலமும் அற்புதமாக அமையும் வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிக ராசியினருக்கு, நினைத்ததை அடையும் வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் நோய்கள் பிரச்சனை தீர்ந்து, புதிய வாழ்க்கையை தொடங்குவார்கள். இனி எது வருங்காலம் இவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், மனதிற்கு நிம்மதி தருவதாகவும் இருக்கும்.
கும்ப ராசிகளுக்கு ஷஷ மகா புருஷ யோகம், கோடீஸ்வர யோகத்தை தரும். வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். சொத்துக்கள் நிலங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். கடின உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள். பெயரும் புகழும் தேடிவரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.