கார் மைலேஜ் அதிகரிக்க இப்படியொரு வழி இருக்கா? ரொம்ப சிம்பிள்.!

கார் மைலேஜ் குறைவாக இருக்கும் என நீங்கள் கருதினால், அதனை எப்படி அதிகரிக்கலாம் என இங்கே தெரிந்துகொள்ளுங்கள். ரொம்ப சிம்பிளான மாற்றம் செய்தால் போதும்.

 

1 /5

உங்கள் கார் மைலேஜ் குறைந்திருந்தால் ரொம்ப சிம்பிளான சில வழிகளை பின்பற்றினால் உடனடியாக கார் மைலேஜ் அதிகரிக்கும். இதனை நீங்கள் கருத்தில் கொள்ளாவிட்டால் பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். சிக்கலை தீர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.   

2 /5

உங்கள் கார் நல்ல மைலேஜ் தரவில்லை என்றால், அதற்கு டயர்கள் காரணமாக இருக்கலாம். அதனால், சிலர் தங்கள் காரில் உள்ள ஸ்டாக் டயர்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு பதிலாக அகலமான டயர்களை பொருத்துகிறார்கள். இதனால், கார் முன்பை விட வேகமாகவும், சீராகவும் இயக்க உதவும். மைலேஜூம் அதிகரிக்கும்.   

3 /5

safety-க்காக அனைத்து கார்களிலும் முன்பக்கம் கிரில்கள் வைக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். காரின் முன்பகுதி சேதமடைவதை தவிர்க்க இத்தகைய கிரில்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் இந்த கிரில்களின் வெயிட் அதிகமாக இருந்தால் இன்ஜினில் அதிக அழுத்தம் ஏற்பட்டு மைலேஜ் தானாகவே குறைகிறது. அதனால் இதனை அகற்றுவதன் மூலம் மைலேஜை அதிகரிக்கலாம்.  

4 /5

இப்போதெல்லாம், தங்கள் காரை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக அதில் நிறைய ஆக்சஸெரீஸ்களை பொருத்துகிறார்கள். இதன் காரணமாக காரின் தோற்றம் சூப்பராக மாறுகிறது என்றாலும், எஞ்சின் மீது அழுத்தம் அதிகரித்து மைலேஜும் குறைகிறது. இவற்றை எல்லாம் நீக்குவதன் மூலம் உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்கலாம்.  

5 /5

காருக்குள் சூப்பராக சவுண்ட் சிஸ்டம் வேண்டும் என்பதற்காக எடை அதிகமாக இருப்பதை கூட கருத்தில் கொள்ளாமல் பேஸ் பாக்ஸூகளை நிறுவி விடுகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பேஸ் பாக்ஸூகள் கார்க்குள் வைக்கப்படுவதால், இதற்கு தேவையான ஆற்றலை கொடுக்க இன்ஜின் அதிக அழுத்ததை எடுக்க வேண்டியதாகிறது. இதனால் எரிபொருளின் தேவை அதிகரிப்பதுடன் மைலேஜூம் குறைகிறது.