Uric Acid Control: இன்றைய அவசர காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக பலர் பல வித உடல்நல கோளாறுகளால் அவதிப்படுகிறார்கள். இதில் யூரிக் அமில பிரச்சனையும் ஒன்றாகும்.
Uric Acid Control: உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், அது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகின்றது. அதிகரிக்கும் யூரிக் அமிலம் மூட்டுகளை சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யப்படுகிறது. இது கடுமையான வலியை ஏற்படுத்தும். யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவை போல யூரிக் அமில அளவையும் கண்டிப்பாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதன் அளவு அதிகமானால், அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தும். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிள்: ஆப்பிள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும் பழமாகும். ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமிலத்தை செயலற்றதாக்கி உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. ஆப்பிளை தினமும் தவறாமல் சாப்பிடுவது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுவதோடு கீல்வாத பிரச்சனையையும் குறைக்கிறது.
முழு தானியங்கள்: யூரிக் அமில நோயாளிகள் முழு தானுயங்களை தங்கள் டயட்டில் பயன்படுத்தலாம். ஓட்ஸ், பார்லி, கினோவா மற்றும் பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் குனம் கொண்டவை. இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட குறைவான அளவில் பியூரின்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
சிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் யூரிக் அமில நோயாளிகளுக்கு நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளலாம். இவை யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும். மேலும், இவற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்க உதவுகிறது.
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் வீக்கத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கின்றன. யூரிக் அமில அளவை குறைக்க அவ்வப்போது நெல்லிக்காயை உட்கொள்வது நல்லது.
கொத்தமல்லி: கொத்தமல்லி உடலில் இருந்து யூரிக் அமில படிகங்களை அகற்ற உதவுகிறது. கொத்தமல்லி இலையில் யூரிக் அமிலத்தை சிறுநீருடன் வெளியேற்றும் தன்மை உள்ளது. யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் கொத்தமல்லி டீ அல்லது கொத்தமல்லி தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
வேம்பு: யூரிக் அமில படிகங்களை நீக்குவதில் வேம்பு சிறப்பாக செயல்படுகிறது. வேம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வீக்கத்தை குறைத்து யூரிக் அமில பிரச்சனையை குணப்படுத்துகின்றன. வேம்பின் பண்புகள் உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.