PF சந்தாதாரர்களுக்கு அடிச்சுது லாட்டரி: வருகிறது வட்டி பணம்.. செக் செய்வது எப்படி?

EPFO Interest Rate: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. ஏனெனில் வட்டி பணம் மிக விரைவில் பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் வந்து சேரும். 

பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் விரைவில் வட்டி பணம் காரணமாக ஒரு நல்ல தொகை வந்து சேரும். இது பணியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக வரும். அதன் பிறகு ஊழியர்களின் காத்திருப்பும் முடிவுக்கு வரும். இது குறித்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

1 /8

2022-2023 நிதியாண்டில் PF ஊழியர்களுக்கு 8.15 என்ற விகிதத்தில் வட்டியை வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஒரு நல்ல அளவாக கருதப்படுகின்றது. 

2 /8

இந்த மாத இறுதிக்குள் அரசாங்கம் வட்டிப் பணத்தை பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளுக்கு அரசு மாற்றலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் எதுவும் வரவில்லை.   

3 /8

கணக்கில் எவ்வளவு வட்டி வரும் என்ற கேள்வி அனைத்து சந்தாதாரர்களின் மனதிலும் உள்ளது. இதை தெரிந்துகொள்ள இதன் கணக்கீட்டை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். 

4 /8

EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். 

5 /8

நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று அலைய வேண்டாம். இது தவிர, EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

6 /8

மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.

7 /8

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள். 

8 /8

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது தனது ஊழியர்களுக்கு பல வித புதுப்பிப்புகளை வெளியிடுகின்றது. இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளி / நிறுவனம் மூலம் சரிபார்க்க வேண்டியது (வேலிடேஷன்) அவசியம் என இபிஎஃப்ஓ தற்போது தெரிவித்துள்ளது.