ஜனவரி 17 சனிப்பெயர்ச்சி, இந்த 4 ராசிகளின் அதிஷ்டம் பிரகாசிக்கும்

Saturn Transit 2023: ஜனவரி 17, 2023ல் சனி கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்ப ராசிக்கு சனியின் வருகை 12 ராசிகளையும் பாதிக்கும். சனி ராசி மாற்றத்தின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

மேஷ ராசி: சனி பகவான் உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து, சனி தனது 3ம் பார்வையால் தைரிய, வீரிய ஸ்தானமான உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதன் காரணமாக உங்களின் செயல்களில் சற்று தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

2 /12

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், இருப்பினும் சில நாட்களுக்கு சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள், இதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். சனியின் தாக்கத்தால் வெளிநாட்டவர்களுடன் வியாபாரம் செய்வீர்கள்.  

3 /12

மிதுன ராசி: 2023-ம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் போது விசேஷ பண பலன்கள் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் சுப பலன்கள் உண்டாகும். திடீரென்று பண மழை உங்கள் பக்கம் வீசும்.    

4 /12

கடக ராசி: சனி ராசி மாற்றத்தின் தாக்கம் கடக ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். வேலை அல்லது பணியிடத்தில் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். பண இழப்பு காரணமாக, நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.  

5 /12

சிம்ம ராசி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், ஆனால் மாதத்தின் இடையில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். மாதத்தின் இறுதியில் எடுக்கும் முடிவுகள் வியாபாரத்திற்கு பலன் தரும்.    

6 /12

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் ஆரம்பம் சிறப்பாக அமையும். இந்த வருடம் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும், ஆனால் நடு பகுதியில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மாதத்தின் இறுதியில், மீண்டும் உங்கள் பக்கம் வெற்றி அலை வீசும்.    

7 /12

துலாம் ராசி: ஜனவரி 17 முதல், துலாம் ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள். இதன் மூலம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும்.  

8 /12

விருச்சிக ராசி: விருச்சிகம் மற்றும் கடக ராசிக்காரர்கள் மீது சனி தசை தொடங்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். நிதி நிலை மோசமாகலாம். சொத்து சம்பந்தமான் தகராறுகளை தவிர்ப்பது நல்லது.   

9 /12

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.    

10 /12

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். துன்பம் குறையும். திடீர் பண ஆதாயமும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக இருக்கும்.  

11 /12

கும்ப ராசி: இந்த ராசிகளுக்கு அடுத்த பத்து நாட்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும். ஜனவரி 17-ம் தேதி சனி உங்கள் ராசியில் அமரும் போது இந்த சுப கூட்டணியின் பலன்கள் நீங்கும்.  

12 /12

மீன ராசி: சனி பெயர்ந்தவுடன் மீன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சிலும் கோபத்திலும் கட்டுப்பாட்டை வைத்திருங்கள், இல்லையெனில் தேவையற்ற சச்சரவுகளில் சிக்கிக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.