Gautam Gambhir: அரசியலில் இருந்து விலகும் கெளதம் கம்பீர்? திடீர் அறிவிப்பு!

Gautam Gambhir quit politics: அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜகவிடம் கேட்டுக்கொண்டுள்ளார் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர்.

 

1 /5

பாஜகவின் டெல்லி எம்பியாக இருந்த கவுதம் கம்பீர், தனது அரசியல் கடமைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.  

2 /5

மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் அமித் ஷா ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்! தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் கெளதம் கம்பீர்.  

3 /5

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கௌதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.  கிழக்கு டெல்லி தொகுதியில் தேர்தலில் நின்ற கெளதம் கம்பீர் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.  

4 /5

இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தல் தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கெளதம் கம்பீர். இந்த முறை லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.    

5 /5

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தவர் கெளதம் கம்பீர். இடது கை பேட்ஸ்மேனான இவர் பல முக்கிய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.