12 ஆண்டுக்கு பின் குரு உச்சம்.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ கோடீஸ்வர வாழ்க்கை

Jupiter Transit 2024: மே 1, 2024 ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2024 ஆம் ஆண்டில் பிரகாசிக்கும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

குரு பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், குரு பகவானுக்கு தனி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் குரு ஒரு சுப கிரகமாகும், மக்களுக்கு சுப பலன்களை தருபவராகவும் பார்க்கப்படுகிறார். உங்கள் ஜாதகத்தில் குரு சாதகமான ஸ்தானத்தில் இருந்தால், வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை பெறுவீர்கள். அந்தவகையில் வருகிற மே 1, 2024 அன்று மதியம் 2:29 மணிக்கு குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே இந்த குரு பெயர்ச்சியாகள் எந்த ராசிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். 

1 /6

ரிஷபம்: குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கலாம். புதிய வேலைகளைத் தொடங்குவது சாதகமான பலனைத் தரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

2 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு மே 1 ஆம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். வேலையில் சுப பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலை வாழ்கையில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். 

3 /6

சிம்மம்: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புத பலன்களை தரும். வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் எதிர்கொண்டு வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

4 /6

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பீர்கள். ஆசைகள் அனைத்தையும் நிறைவேறும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

5 /6

தனுசு: குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தத்தை பெறுவீர்கள். தொழில் திட்டங்கள் வெற்றியடையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வருமானம் ஈட்ட புதிய வழிகள் திறக்கப்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கலாம்..

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.