சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Shani Nakshatra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக இருப்பவர் சனி பகவான். அவர் சமீபத்தில் நட்சத்திர பெயர்ச்சி அடைந்தார்.

Shani Nakshatra Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் ஏப்ரல் 06, சனிக்கிழமை அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளின் வாழ்வில் சுபிட்சம் பெருகும். தொழில், வியாபாரம் வளரும். வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

1 /8

சனி பகவானின் அனைத்து மாற்றங்களும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் சனி பகவான் தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றினார். அவர் பூரட்டடாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிகப்படியான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /8

மேஷம்: சனி நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்குப் பெரிய பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குழந்தை வரம் கிட்டும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

3 /8

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் நற்பலன்களை பெறுவார்கள். இந்த காலத்தில் பண வரவு நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். 

4 /8

கன்னி: சனியின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் தொழில் விருத்தி அடையும். பணி இடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் நிதி நிலை மேன்மையடையும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

5 /8

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் பல வித நல்ல பலன்களை அளிக்கும். வாழ்வில் பல வித நன்மைகள் நடக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

6 /8

தனுசு: சனி நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி உங்களுக்கு தொழில் அல்லது வணிகத் துறையில் மகத்தான வெற்றியைத் தரும். வேலை தேடும் தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருளால் புதிய வேலை கிடைக்கும். சனிபகவான் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பின் பலனைத் தருவார். 

7 /8

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பெயர்ச்சி சுப பலன்களைத் தந்துள்ளது. சனி பகவானின் அருளால் நிதி நிலை மேம்படும். இதன் விளைவாக, பொருளாதார நிலை மிகவும் வலுவடையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.