Laptop Days: லேப்டாப் டேஸ் விற்பனை அமேசானில் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு லேப்டாப்கள் 40 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. அவற்றில் சில லேப்டாப்களை இதில் காணலாம்.
நாடு முழுவதும் 'லேப்டாப் டேஸ்' அமேசான் இந்தியா விற்பனையை நடத்துகிறது. இந்த விற்பனை நேற்று (நவ. 27) தொடங்கியது. இது நவ. 30ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையின் போது, அமேசான் நிறுவனம் இந்தியாவில் கேமிங் மடிக்கணினிகள் உட்பட பல்வேறு மடிக்கணினிகளை வாங்குவதற்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
இது தவிர, பழைய லேப்டாப்களை புதிய மடிக்கணினிகளுக்கு எக்ஸ்சேஞ் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது. அமேசானில் மடிக்கணினிகளை வாங்குவதற்கு 12 மாதங்கள் வரை கட்டணமில்லா மாதத் தவணை வழங்குகிறது.
Lenevo Ideapad Gaming 3: இந்த லேப்டாப் விலை 52,490 ரூபாயகும். இது 15.6 இன்ச் FHD IPS 144Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது இன்டெல் Core i5-11320H பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி RAM, 512ஜிபி SSD ஸ்டோரேஜ் உள்ளது. NVIDIA RTX 2050 4GB GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
ASUS TUF Gaming F15: இந்த லேப்டாப் விலை 54,030 ரூபாயாகும். இது இன்டெல்லின் Core i5-11400H 11ஆவது தலைமுறை பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 15.6 இன்ச் FHD 144Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி SSD ஸ்டேோரேஜ் கொண்டுள்ளது. இது பின்னொளி கீ-போர்டுடன் வருகிறது மற்றும் விண்டோஸ் 11 மூலம் இயக்கப்படுகிறது.
Acer Aspire 5 Gaming Lapto: இந்த லேப்டாப் விலை 56,045 ரூபாயாகும். இது 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது இன்டெல் Core i5 12ஆவது தலைமுறை பிராஸஸருடன் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி RAM மற்றும் 512ஜிபி SSD ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
MSI GF63 Thin: இந்த லேப்டாப் விலை 51,990 ரூபாயாகும். இது 15.7 இன்ச் FHD IPS 144Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது இன்டெல் Core i5-11260H செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி RAM, 512ஜிபி SSD ஸ்டோரேஜ் உள்ளது. NVIDIA GTX 1650 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.