பேராசை பெரும் நஷ்டம்! போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி?

போலி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பர மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

1 /6

உங்கள் மொபைல் போன், லேப் டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை மால்வேர் மூலம் ஹேக் செய்து, பணத்தை திருட முயற்சிக்கும் போலியான விளம்பரங்கள் குறித்து, எச்சரிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது. பங்குச் சந்தை, ஆன்லைனில் வர்த்தகம் செய்யும்போது வரும் மோசடி விளம்பரங்கள், மற்றும் பல்வேறு சமூக ஊடக பயன்பாடுகளில் வரும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

2 /6

மோசடி செய்பவர்கள் "டீப்ஃபேக் வீடியோக்கள்" மற்றும் படங்களைப் பயன்படுத்துகிறார்கள்" என்று அரசாங்கத்தின் எஸ்எம்எஸ் சுட்டிக்காட்டுகிறது. டீப்ஃ பேக்குகள் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய கவலையாக மாறிவிட்டன, குறிப்பாக AI தொழில்நுட்பம் நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்பிங் செய்து மக்களை ஏமாற்ற அனுமதிப்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 

3 /6

ஆகவே இது தொடர்பாக மக்களை எச்சரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்து, கடந்த சில நாட்களாக அவர்களின் மொபைல் நெட்வொர்க் மூலம் எஸ்எம்எஸ்கள் மக்களை சென்றடைகின்றன. “பேராசைக்கு ஒருபோதும் இரையாகவேன்டாம், மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள், ”என்று அந்த செய்தி மேலும் கூறுகிறது.

4 /6

தெரியாத மற்றும் அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து வரும் செய்திகளையோ, அல்லது இணையதள முகவரிகளையோ திறப்பதை மக்கள் எப்போதும் தவிர்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைவராலும் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன, ஆனால் இந்த மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க இதுவே சிறந்த வழியாகும். 

5 /6

ஆனால் உங்களில் சிலர் இந்த காலகட்டத்தில் ஆர்வமுள்ளவர்களாகிவிட்ட நிலையில், இந்த மோசடி செய்பவர்களுக்கு இரையாகி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது உடனே அவர்கள் என்ன செய்ய வேண்டும்? "சஞ்சார் சாத்தியில் சக்சு வசதியில் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகளைப் பற்றி உடனே புகாரளிக்க வேண்டம்."

6 /6

சைபர் குற்றங்கள், மோசடிகள் மற்றும் பலவற்றிற்கான புதிய சக்ஷு புகார் சேவையை வழங்கும் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் மோசடியை உடனடியாகப் புகாரளிப்பது குறித்து அரசாங்கத்தின் செய்திகள் பல விழிப்புணர்வுகளை அளித்து வருகின்றன. மேலும் நீங்கள் 1930 என்ற எண்ணில் கூட புகாரளிக்கலாம் அல்லது Cybercrime.gov போர்ட்டலுக்குச் சென்று உங்கள் புகார்களைப் பெறலாம்.