குரு வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்

ஜூலை மாதத்தில் செல்வத்தின் கடவுளான வியாழன் வக்ர நிலையில் பயணிக்க போகிறார். முன்னதாக ஏப்ரல் 13 ஆம் தேதி குரு தனது சொந்த ராசியான மீனத்தில் பெயர்ச்சியானார். அன்றிலிருந்து குரு பகவான் இந்த ராசியில் அமர்ந்திருக்கிறார். இதற்குப் பிறகு, ஜூலை 29 அன்று, குரு பகவான் வியாழன் அதன் சொந்த ராசியில் வக்ர நிலையில் பயணிப்பார். குரு பகவான் வியாழனின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும். எனவே குரு பகவான் வியாழனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குபேர பாக்கியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /4

ரிஷபம்- ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சியால் அனுகூலமான பலன் கிடைக்கும். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு வியாபாரம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

2 /4

மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தி வைக்க முயற்ச்சிக்கவும். மேலும் உங்கள் துறையில் ஒரு சிறப்பு நபரிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெறலாம்.

3 /4

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் செல்வம், புகழ், கௌரவம், பதவி அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய முதலீடுகளில் வெற்றி கிடைக்கும்.

4 /4

கும்பம்- ஜூலை 29 முதல் வக்ர பெயர்ச்சி உள்ளதால் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இவர்களின் துறையில் வெற்றி பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.   (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)