இந்த 3 ராசிகளுக்கு 2023 வரை குருபகவானின் சிறப்பு அருள் கிடைக்கும்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகவும் முக்கியமானது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் தனது ராசியை மாற்றி மீன ராசியில் ஆட்சி பெற்றார்.  அதன்படி குரு பகவானின் பார்வை கடகம், கன்னி, விருச்சிக ராசிகளின் மீது விழுகிறது. இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு தீமை பலன்களை தரும். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு 2023 வரை நல்ல பலன் தரும் என்று பார்ப்போம்.

1 /4

பொதுவாக குரு பகவான் அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப்பணி, புனித இடம், ல்வம், தொண்டு, நல்லொழுக்கம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். அதன்படி இந்த குரு பகவான் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2023 இல் ராசியை மாற்றுவார். அத்தகைய சூழ்னிலையில் தற்போது இந்த ஆண்டு முழுவதும், 3 ராசிக்காரர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வதோடு, மிகுந்த மகிழ்ச்சியையும் பொழிவார் குரு பகவான். 

2 /4

ரிஷபம்: மீன ராசியில் வியாழன் நுழையும் போதே ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கியுள்ளன. வரும் 1 வருடத்திற்கு வியாழன் கிரகம் இவர்களுக்கு பல நன்மைகளை தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பெரிய கனவு நிறைவேறும். வருமானத்தில் வலுவான அதிகரிப்பு இருக்கும், இது உங்கள் நிதி சிக்கல்களை சமநிலை செய்யும். சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் கைகூடும்.

3 /4

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில்-வியாபாரத்தில் மிகவும் நல்ல பலன்களைத் தரும். அவர்கள் பதவி உயர்வு பெறலாம். சம்பளம் கூடும். வியாபாரிகளின் வலைப்பின்னல் வலுப்பெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குறிப்பாக மீடியா மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் பெரிய பலன்களைப் பெறுவார்கள்.

4 /4

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைக் கொண்டுவரும். பயணங்கள் இருக்கும், அதில் நிறைய வெற்றிகள் இருக்கும். வியாபாரிகளுக்கும் வியாழன் பல நன்மைகளைத் தருவார். தொழில் வளர்ச்சி எளிதாக இருக்கும். மாறாக, வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்குகள் நிறைவேறும். எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)