அளவுக்கு அதிகமான உப்பு பேராபத்து என்கின்றனர் நிபுணர்கள்..!!

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் நாம் அறிய வேண்டும்.

1 /5

உடல் உழைப்பு இருக்கும் போது அதிகப்படியான உப்பு வியர்வை வழியாக வெளியேறி உப்பு தேவை அதிகமாக இருக்கும்,  ஆனால் உடல் உழைப்பும், வியர்வையும் இல்லாத சூழலில் உப்பு உடம்பில் அதிகம்  சேரக்கூடாது.  

2 /5

உணவில் சேர்க்கப்படும் உப்பை தவிர பல செயற்கை சுவையூட்டிகளின் காரணமாக துரித உணவுகளின் மூலம் பெறப்படும் உப்பின் அளவு மிகவும் கூடுதலாக இருக்கிறது.

3 /5

இன்று உப்பிலும் பலவகை உண்டு. தூள் உப்பு, கல் உப்பு, இந்துப்பு, அயோடின் சேர்த்த உப்பு, அயோடின் சேர்க்காத உப்பு என்று பலவகைகள் உண்டு.

4 /5

நாள் ஒன்றுக்கு உடலுக்கு 2. 3 கிராம் முதல் 5 கிராம் வரை அளவு சோடியம் இருந்தாலே போதுமானது. உப்பை தேவைக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, உடலில் வயிற்றுப்புண், இதய சுவர் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகத்தில் கல், உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

5 /5

கருவாடு, ஊறுகாய், அப்பளம், வடகம் போன்றவற்றிலும் உப்பு அதிகமாகவே இருக்கிறது. அதனால் அவற்றை அளவோடு உண்ண வேண்டும்