மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

நாம் அன்றாட சமையலில் பயன் படுத்தும் ஒரு பொருள் உப்பு. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று பழமொழி உண்டு ஆனால், உப்பு மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

1 /5

சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு  சத்தமில்லாமல் உயிரைகொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.

2 /5

உப்பில் இருக்கும் ரசாயன பொருள்கள் உடலில் நீர்ச்சத்து, இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும், இதயம் சீராக செயல்படவும் மிகவும் அத்தியாவசியமானது என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, உருவாகிறது.

3 /5

ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், நோயாளிகள், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அளவை முடிவு செய்ய வேண்டும்.

4 /5

உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உரிஞ்சி விடும்.  

5 /5

எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு சிறந்தது. உப்பு அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள். குறைவான உப்பை சேர்த்து கொள்வதை பழக்கிக் கொண்டால் நீண்ட நாட்கள் உடல் நலத்தோடு வாழலாம்.