தலைவலி சட்டுனு மறைய... இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்!

Headache Remedies: கடுமையான தலைவலி இருக்கும்பட்சத்தில் சில ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அவை குறித்து இதில் காணலாம். 

  • Jan 09, 2024, 19:07 PM IST

பல்வேறு காரணங்களால் மக்களுக்கு தலைவலி ஏற்படுவது வழக்கம்தான். ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும். 


 

 

 

 

 

1 /7

டார்க் சாக்லேட்: இதில் அதிக மேக்னீஷியம் இருப்பதால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.  

2 /7

காளான்: காளான் போன்று riboflavin (b2) ஊட்டச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் சிறுகுடல் பிரச்னைகளை போக்கி, தலைவலிக்கும் நிவாரணமளிக்கும்.   

3 /7

காபி: கேஃப்பீன் அதிகமாக உள்ள காபிகளை குடிப்பது தலைவலிக்கு நிவாரணமளிக்கும். 

4 /7

வாழைப்பழம்: இதிலும் மேக்னீஷியம் அதிகமாக உள்ளது. தலைவலியை போக்குவதுடன் உடலையைும் சுறுசுறுப்பாக்கும். 

5 /7

தர்பூசணி: உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் தலைவலியை போக்கும். தர்பூசணியில் 92% நீர்ச்சத்து இருப்பதால், அது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். 

6 /7

ப்ரோக்கோலி: ஹார்மோன்கள் மாற்றம் கூட தலைவலியை உண்டாக்கும். எனவே, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள்

7 /7

பெரீஸ்: ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்த இவற்றை சாப்பிட்டால் தலைவலி காணாமல் போகும்.