History June 16: வரலாற்றின் பொக்கிஷத்தில் இன்றைய நாள் சொல்வது என்ன?

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும். வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...

வரலாற்றில் ஜூன் 16: இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க இந்திய தலைவர்கள் லண்டனுக்கு சென்ற நாள் ஜூன் 16. வரலாற்றில் இந்த நாளில் வேறு என்ன முக்கிய சம்பவங்கள் நடந்தது என்பதை தெரிந்துக் கொள்வோம்

Also Read | காய் & பழங்களை ஏன் ஃப்ரிட்ஜில் ஒன்றாக வைக்கக்கூடாது தெரியுமா?

1 /5

1946: சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னதாக பிரிட்டன் அரசு இந்தியாவில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அறிவுறுத்தியது. அதற்காக லண்டனுக்கு இந்திய தலைவர்கள் அழைக்கப்பட்ட நாள் ஜூன் 16   (புகைப்படம்: WION)

2 /5

1963: வாலண்டினா தெரேஷ்கோவா விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி என்ற சரித்திரம் படைத்த நாள் ஜூன் 16 (புகைப்படம்: WION)

3 /5

1976: தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களை போலீசார் கொன்ற தினம் இன்று   (புகைப்படம்: WION)

4 /5

2010: நாடு முழுவதும் புகையிலை தடையை அமல்படுத்திய முதல் நாடு பூட்டான் (புகைப்படம்: WION)

5 /5

2012: ஷென்சோ 9 விண்கலனை சீனா வெற்றிகரமாக ஏவிய நாள் ஜூன் 16   (புகைப்படம்: WION)