திங்கட்கிழமைகளில் சிவனை எப்படியெல்லாம் வழிபடக்கூடாது? வழிபட்டால் என்ன ஆகும்?

Monday Worship Dedicated To Lord Shiva :  தேவாதி தேவர் என்று அழைக்கப்படும் சிவபெருமான், முத்தேவர்களில் முதல்வர், நெற்றிக் கண் கொண்ட யோகி. மிகவும் எளிமையாக வழிபடக்கூடிய சிவபெருமான், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் பக்தர்களை காத்தருள்வார்

Shivpuja Rituals : பக்த வத்சலன் எனப்படும் சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது இந்து மதத்தின் மரபு. அபிஷேகத்தால் மனம் குளிரும் சிவன், தன்னை நாடி வந்தவர்களுக்கு அருளை அள்ளி வழங்குவார். ஆனால், சிவனை வழிபடும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை தெரிந்துக் கொண்டு அவரை பூஜிப்பது நல்லது....

1 /8

கலியுகத்தில் கடவுளின் கருணை இல்லாமல் எப்படி வாழ்வது? ஆண்டவனின் அருளைப் பெற அனைவரும் வழிபாடுகளை செய்கின்றோம். அவற்றில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் பிழைகள், நமது வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே செய்யக்கூடாதவை எவை என அறிந்து விலக்குவது நல்லது

2 /8

துளசி மிகவும் உன்னதமான மூலிகை மட்டுமல்ல, பூஜைகளில் மிகவும் முக்கியமான இடம் பிடிப்பது. ஆனால், சிவனை பூஜிக்கும்போது, துளசியை பயன்படுத்தக்கூடாது. துளசி, லட்சுமியின் அம்சம் என்பதால், விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களுக்கு செய்யப்படும் பூஜையில் துளசிக்கு விலக்கு இல்லை

3 /8

சிவனுக்கு உரிய வில்வ இலைகளை பூஜையில் பயன்படுத்த வேண்டும் என்றாலும், வில்வ இலைகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதற்கான விதிமுறைகளும் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. காய்த்த  வில்வ மரத்தில் இருந்து கிடைக்கும் இலைகளையே சிவ பூஜைக்கு பயன்படுத்துவது உசிதம் என்பது முக்கியமான தகவல்

4 /8

சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போதும், அலங்காரம் செய்யும்போதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தை பயன்படுத்தக்கூடாது. விபூதியை பயன்படுத்த வேண்டும்

5 /8

சிவனின் அருளைப் பெறுவதற்கு அன்னை லட்சுமியை ப்ரீதி செய்யும் பொருட்களை விலக்குவது உசிதம்

6 /8

சிவ பூஜையில் தாமரை மலர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஏனென்றால், தாமரை மலரானது விஷ்ணுவின் மனைவி அன்னை லட்சுமிக்கு உரித்தானது

7 /8

அபிஷேகப் பிரியர் சிவனுக்கு 16 விதமான ஷோடச அபிஷேகங்கள் செய்யலாம். மணமில்லாத பூக்களைக்கூட அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால், தாழம்பூ மட்டும் சிவ பூஜையில் எந்தவிதத்திலும் பயன்படுத்தக்கூடாது

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது