IND vs AUS Final: உலகக் கோப்பையில் யார் கெத்து...? புள்ளிவிவரங்கள் இதோ!

IND vs AUS Head To Head: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை (நவ. 19) உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோத உள்ளன. அந்த வகையில், இரு அணிகளின் இதுவரையிலான Head to Head வரலாற்றை இதில் காணலாம். 

  • Nov 18, 2023, 17:57 PM IST

 

 

 

 

 

 

1 /7

இந்திய அணி நடப்பு தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் தொடர்ந்து வென்றுள்ளது. 

2 /7

இந்திய அணி இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 6 முறை கோப்பையை வென்றுள்ளது. 

3 /7

இந்திய அணி இத்தோடு நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆஸ்திரேலிய அணி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

4 /7

இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் 13 முறை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி உள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்று, இந்தியா 5இல் வென்றுள்ளது. மேலும், கடைசி 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. 

5 /7

இந்தியா - ஆஸ்திரேலியா இதற்கு முன் 2003 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதியது. 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

6 /7

ஒருநாள் அரங்கில் இரு அணிகளும் 150 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 57 போட்டிகளில் இந்தியாவும், 83 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. இதில் 10 போட்டிகளுக்கு முடிவில்லை.  

7 /7

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (நவ. 19) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கும்.