நோயற்ற வாழ்வைப் பெற தினசரி டயட்டில் சேர்க்க வேண்டியவை!

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நம்மை நோய்கள் அண்டாத.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்  எவை என்பதை அறிந்து கொண்டு அதனை டயட்டில் சேர்த்து வந்தால் நோயற்ற வழ்வை வாழலாம்.

1 /5

வைட்டமின் சி நெல்லிக்காயில், அதிகம்  காணப்படுகிறது. எனவே  உணவில் நெல்லிக்காயை சேர்த்தால்,  நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படும். 

2 /5

பப்பாளியில்  வைட்டமின் சி நிறைந்து உள்ளது அதோடு அதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஃபோலேட் ஆகியவை உடலை பல பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்கும்.

3 /5

கீரையில் வைட்டமின் சி உள்ளது. மேலும், இதில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் உள்ளன.  கீரையை சமைத்தோ அல்லது கீரை ஜூஸ் வடிவிலோ உணவில் சேர்க்கலாம்.

4 /5

தயிரில் உள்ள வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சந்தையில் இருந்து வாங்கிய தயிரை சேர்த்துக் கொள்வதை விட, நீங்கள் வீட்டில் உறைய வைக்கும் தயிர் மிகவும் சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

5 /5

பாதாம் பருப்பில்  உள்ள வைட்டமின் ஈ, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்குவதற்கும் உடலின் பல பிரச்சனைகளில் விடுபடவும் உதவும்.