டீம்லயே இல்ல.. ஆனால் பீல்டிங் செய்ய வந்த ரிங்கு சிங்..! என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இடம்பெறாத ரிங்கு சிங் இந்திய அணிக்காக பீல்டிங் செய்தார்.

 

1 /7

இந்திய அணி இப்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.  

2 /7

முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான அணியில் ரிங்கு சிங் இல்லை.  

3 /7

அதாவது டெஸ்ட் தொடருக்கான அணியிலேயே ரிங்கு சிங் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இடம் பெற்று இருந்தார். 

4 /7

அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனாலும் மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்தார். இது ரசிகர்களுக்கு மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

5 /7

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம்  காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக அணியில் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டார். 

6 /7

அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில், தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி மோதும் நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். 

7 /7

எனவே, அவரது இடத்தை நிரப்ப இந்திய நிர்வாகம் ரிங்கு சிங்கை அணியில் சேர்த்துள்ளது. அதனால் தான் ரிங்கு சிங் மாற்று வீரராக களம் இறக்கி பீல்டிங் செய்தார்.